Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி

October 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி

அநுர அரசு தொடர்ச்சியாக மக்கள் ஆதரவை இழந்து வருகின்றது என்றும், கோட்டாபய ராசபக்ச சென்ற பாதையிலேயே இந்த அரசும் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “மூன்றில் ஒரு பங்கினால் மின் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது 50 சதவீதத்தால் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

வரிச் சுமைகள்

சுகாதாரம் மற்றும் கல்விக்கான ‘வற்’ வரிகளைக் குறைப்பதாகக் உறுதியளித்த போதிலும், இரு வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி | Electricity Tariff Revision Electricity Bill Today

வாழ விரும்பும் அழகான நாட்டை அமைப்பதாகக் கூறினார்கள். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. வரிச் சுமைகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் கிடையாது என்றார்.

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி

இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சுங்கத்திலிருந்து பரிசோதிக்கப்படாமல் 321 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஹேக்கர்களால் 2.5 மில்லியன் டொலர் காணாமல்போயுள்ளது.

கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி | Electricity Tariff Revision Electricity Bill Today

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு 18 ஆயிரத்து 368 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய அளவிலான இழப்பாகும்.

மின்சாரம் தடைப்பட்டால் அரசே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னதாகக் கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் இருமுறை நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்புத் துறைமுக நகரத்திலிருந்து சீன முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். எமக்கு டொலர் தேவைப்படும் இந்த நெருக்கடியான காலத்தில் வந்த முதலீடுகளும் திரும்பிச் செல்வது பாரிய பின்னடைவாகும்.” – என்றார்.

Previous Post

நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி

கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி

October 22, 2026
நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்

நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்

October 22, 2026
மெல்பேர்னில் விக்டர் ராஜலிங்கத்தின் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீட்டு விழா 

மெல்பேர்னில் விக்டர் ராஜலிங்கத்தின் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீட்டு விழா 

October 21, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

கவிதையால் கலக்கமடைந்துள்ள அநுர அரசாங்கம் | எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

October 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures