Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்கட்டண திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு !

August 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித திருத்தமும் செய்யத் தேவையில்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மூன்றாம் காலாண்டின் மொத்த மின் விநியோகச் செலவிற்கும்,மொத்த வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு ரூபா 417 மில்லியன் ரூபாவாகும். இந்நிலையைக் கருத்திற்கொண்டு, மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேசிய முறைமை இயக்க நிறுவனத்தினால் மூன்றாம் காலாண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட விநியோகச் செலவு மதிப்பீடுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

கட்டண அறிவிடல் முறைமைக்கு அடைய, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு அதிகரிப்பானது 0.3 சதவீதம் (ரூபா 417 மில்லியன்) ஆக மட்டுமே காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மூன்றாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் எதுவும் தேவையில்லை என்றும், இரண்டாம் காலாண்டில் நிலவிய அதே கட்டண முறையே இக்காலாண்டிலும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணக் கொள்கையின்படி, நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டின் வருமான அல்லது பற்றாக்குறை மூன்றாம் காலாண்டின் மதிப்பீடு செய்யப்பட்ட செலவுகளுடன் சரிசெய்யப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூபா 30,118 மில்லியன் வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில், நிலக்கரி நிலைமை காரணமாக முதலாம் காலாண்டில் மின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட மேலதிகச் செலவுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்படும் மேலதிக மின் உற்பத்திச் செலவை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கக்கூடாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னைய கட்டணத் திருத்தத்தின்போதே தீர்மானித்திருந்தது. அதற்கமைய, 2026 முதலாம் காலாண்டில் நிலக்கரி நிலைமை காரணமாக மேலதிகமாகச் செலவிடப்பட்ட ரூபா 3,366 மில்லியனை மின் உற்பத்திச் செலவிலிருந்து நீக்குவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் மொத்த மின் விநியோகச் செலவிற்கும் (ரூபா 186,027 மில்லியன்), மொத்த வருமானத்திற்கும் (ரூபா 185,610 மில்லியன்) இடையிலான வேறுபாடு ரூபா 417 மில்லியன் மட்டுமே ஆகும். இந்நிலையைக் கருத்திற்கொண்டு, மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை இல்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Previous Post

ஜனாதிபதி அனுரவுடன் பேசியது என்ன? சுமந்திரன் விளக்கம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

மின்கட்டண திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு !

August 3, 2026
ஜனாதிபதி அனுரவுடன் பேசியது என்ன? சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி அனுரவுடன் பேசியது என்ன? சுமந்திரன் விளக்கம்

August 3, 2026
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

August 3, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்…! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

August 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures