Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் அரச சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகப் அரச சேவை டிஜிட்டல்மயமாக்கலைத் துரிதப்படுத்தி, காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையை ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற ஆவண முறைமை தொடர்பான தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம் கொழும்பு SEMA கட்டிடத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இவ்வாறான டிஜிட்டல் மாற்றங்கள் அத்தியாவசியமானவை என்று குறிப்பிட்டார். காகிதப் பயன்பாடற்ற சுங்க ஆவண முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க அனுமதி வழங்கும் செயற்பாடு மிகவும் செயற்திறனாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் மாறுவதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்குப் பாரிய வசதியாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை  இம்முறைமை மூலம் கண்டறிந்து கொள்வதால்,   எந்தவிதமான முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் பின்னணியில், டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதப் பயன்பாடற்ற முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் எவருக்கும் தொழில் இழப்பு ஏற்பட மாட்டாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க அனுமதி முகவர்களின் (Customs Clearing Agents) தொழில்கள் பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

LankaSign டிஜிட்டல் கையொப்பமும் ASYCUDA கட்டமைப்பும் ஒன்றிணைக்கப்படுவதன் மூலம், அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் இணையம் வழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும், இந்த முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமென்றும் ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார். அந்த ஒத்துழைப்பு கிடைக்குமாயின், எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியிலிருந்து இந்த புதிய முறையை வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ASYCUDA கட்டமைப்புடன் LankaSign டிஜிட்டல் கையொப்பத்தை ஒருங்கிணைத்து, காகிதமற்ற சுங்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செயல்முறை, அதன் நன்மைகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் பற்றிய விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் (Q&A) அமர்வில், கலந்துகொண்ட பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அவசியமான விளக்கங்களும் பதில்களும் வழங்கப்பட்டன.

Previous Post

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

Next Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

July 29, 2026
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

July 29, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | அநுர

July 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures