நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் “கவனம் செலுத்த வேண்டிய”மட்டத்திற்கு அதிகரிக்கும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய போதுமான அளவு தண்ணீர் குடித்தல், நாளின் வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.












