Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசில் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது | சீனத் தூதுவர் பாராட்டு!

July 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புதிய அரசில் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது | சீனத் தூதுவர் பாராட்டு!

“புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக சிறந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது ” என்று சீனத் தூதுவர் தெரிவித்தார். 

இந்த மாதம் 31ஆம் திகதியுடன் தனது சேவையை நிறைவு செய்யும் இலங்கையிற்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong),கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை  மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். இதன்போது அவர்  கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்  கூறியதாவது-

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக சிறந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது  என்பதே எனது உணர்வாகும். தற்போதைய அரசாங்கம் தொழிற்துறைக் கொள்கைகள், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கொள்கைகளுடன் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிலைமை மேலும் சிறப்பாக அமையும் என நான் நினைக்கிறேன். இலங்கை என்பது சீனாவின் பாரம்பரிய நட்பு நாடாகும். இலங்கை நண்பர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

இலங்கையிலான எனது 6 வருட சேவிக் காலத்தில், சில இயற்கைப் பேரிடர்களின் போது நானும் எனது குழுவினரும் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று உதவிகளை வழங்கினோம். சீனாவின் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களையும் சீன மக்களின் நட்புறவையும் நான் இலங்கைக்குக் கொண்டு வந்தேன். இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு போன்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கும் எனது குழுவினருக்கும் இலங்க மக்கள் வழங்கிய தாராளமான ஒத்துழைப்பு, உண்மையான நட்பு மற்றும் விலைமதிப்பற்ற ஆதரவிற்காக நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். எனது சேவைக்காலம் இந்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும், முடிந்த போதெல்லாம் இலங்கையுடன் தொடர்பில் இருக்க நான் நடவடிக்கை எடுப்பேன்.” என்றார்

இதன்போது, மல்வத்தை மகா நாயக்க தேரர்  அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும், அஸ்கிரிய மகா  நாயக்க  தேரர் அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர்  சீனத் தூதுவரின் சேவையைப் பாராட்டினர்.  

மல்வத்தை மகா நாயக்க தேரர்  அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவிக்கையில்-

ஒரு வெளிநாட்டுத் தூதுவராக இலங்கைக்கு ஆற்ற வேண்டிய மிகச்சிறந்த சேவையை சீனத் தூதுவர் ஆற்றியுள்ளார்.  சீனத் தூதுவர் அவரது  06 வருட காலப் பதவிக்காலத்தில் ஆற்றிய சேவைகளை நாம் மறக்க முடியாது. எமது நாட்டிற்கு ஏதேனும் ஆபத்துகள்  ஏற்பட்ட நேரங்களில், முதலில் உதவிக்கு வந்தவர்களுள் ஒருவராகும்.  பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் பௌத்த மதத்திற்காக அவர் பெரும் சேவையாற்றியுள்ளார் என்றார். 

அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர்  தெரிவிக்கையில்,

 “பேரிடர் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில்,  இலங்கையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவு சீனத் தூதுவர்  ஆற்றிய பாரிய பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் போற்றுதலுக்குரியவை” என்று கூறினார்.

Previous Post

உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டும் அரசாங்கம்! நாமல் ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

Next Post
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures