வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.
போராட்ட இடத்தில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போதும் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்திய நிலையில், மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
















