இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையில் பிறிஸ்டன் கவுன்டி மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து களத்தடுப்பை தெரிவுசெய்தார்.
இதற்கு அமைய அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் விஷ்மி குணரட்னவுக்கு பதிலாக ஹசினி பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ள நிலையில் தனது கடைசி இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றியையாவது ஈட்ட முயற்சிக்கவுள்ளது.
அணிகள்
இலங்கை: சமரி அத்தபத்து (தலைவர்), இமேஷா துலானி, ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவீஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, கௌஷினி நுதியங்கனா, சுகந்திகா திசாநாயக்க, நிமாஷா மீப்பகே, மிதாலி அயோத்யா.
அயர்லாந்து: அமி ஹன்டர், கெபி லூயிஸ், ஓர்லா ப்ரெண்டகாஸ்ட், ரெபெக்கா ஸ்டொக்கெல், லீ போல், அலிஸ் டெக்டர், லூயி லிட்ல், ஆலின் கெலி, ஆய்மி மெகயர், லாரா மெக்ப்றைட், காரா மறே.












