லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முக்கிய அனுமதியை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நிகழ்நிலையில் தோன்றி சாட்சியமளிக்க அனுமதி வழங்கியுள்ளது.
2011 இல் லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாதுகாப்பு காரணங்கள்
எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அவர் நேரில் முன்னிலையாக மறுத்தமையைத் தொடர்ந்து, குறித்த அச்சுறுத்தல்கள் பற்றிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
இந்தநிலையில் தற்போது கோட்டாபாய ராஜபக்ச நிகழ்நிலையில் தோன்றி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.








