Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

May 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பஸ் போக்குவரத்தில் ஈடுபடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது 20ற்கும் மேற்பட்ட தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடாமல் ஆளுநர் செயலகத்தின் முன்பாக தரித்து நிறுத்தப்பட்டு தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுபடப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆளுநரின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து எதுவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் ஆளுநருடனான சந்திப்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண பயணிகள் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின்  பணிப்பாளர் நாயகம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள திட்டமிடல் பணிப்பாளர், அதிகார சபையின் தலைவர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரையான வீதியில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் 20 நிமிடம் தொடக்கம் 30 நிமிடம் வரையான நேர இடைவெளியில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபட்டு வருகின்றது இதில் சுமார் 21 தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு பேரூந்திற்கும் ஒவ்வொரு நேரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தின் அடிப்படையில் சிறப்பான சேவையை மக்களுக்கு நாம் வழங்கி வருகின்றோம். இந்த முறையானது மாற்றப்பட்டு சுழற்சி முறையிலான சேவை இடம்பெறுமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேரூந்திற்கும் சுழற்சி முறையிலான நேரம் வழங்கப்படும் இதனால் வாடிக்கையாளர்களாக இருக்கின்ற பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர் நோக்குவார்கள் அத்துடன் பேரூந்துகளுக்கிடையிலான நேரம் 30 நிமிடத்தில் இருந்து மேலும் குறைக்கப்படும் இதனால் போட்டித்தன்மை உருவாகி விபத்துக்கள் ஏற்பட வாய்புள்ளது.

எனவே நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கின்ற அதேபோன்று ஏனைய இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி தமது பேரூந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் மேலும் கோரிக்கை விடுத்தனர்.

Previous Post

மாகாணசபை தேர்தலை அரசு நடத்தாது என்பது உறுதி – அகிலவிராஜ்

Next Post

பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் – கட்சிகள் வலியுறுத்தல்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் - கட்சிகள் வலியுறுத்தல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

September 25, 2026
குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

September 25, 2026
மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

September 25, 2026
வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் தம்மிக படபெந்தி

வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் தம்மிக படபெந்தி

September 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures