புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘பாலன் தி பாய்’ திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
‘மஞ்சும்மல் பொய்ஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பாலன் தி பாய்’. இந்த திரைப்படம் சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவர்வதற்காக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘மார்ச் டு ஃபிலிம்’ எனும் பிரிவில் எதிர்வரும் 14-ம் திகதி அன்று பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் சிதம்பரம் பேசுகையில், ” பாலின அடையாளம் , உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,தாய்- சேய் இடையிலான உணர்வு ரீதியிலான பிணைப்பு… ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘பாலன் -தி பாய்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் எம்மை பற்றி அறியாமல் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் சேர வேண்டிய இடத்தை நோக்கிய தேடலுடன் கூடிய பயணத்தை விவரிப்பது தான் இந்தப் படைப்பு” என்றார்.
கே வி என் புரொடக்ஷன்ஸ்- தெஸ்பியன் ஃபிலிம்ஸ்- ஜித்து மாதவன் -சிதம்பரம் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாலன் – தி பாய் ‘ சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

