Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிய கடற்கரை கபடி போட்டி: இலங்கை அணிக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

May 1, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆசிய கடற்கரை கபடி போட்டி: இலங்கை அணிக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

சீனாவில் நடைபெற்ற 6-வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமான கடற்கரை கபடிப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் நேற்று புதன்கிழமை (29) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இப்போட்டியில் இலங்கை பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளன.

ஆசிய பிராந்திய நாடுகளின் பங்கேற்புடன் இப்போட்டிகள் கடந்த ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 29 வரை சீனாவின் சான்யா  நகரில் நடைபெற்றன.

குறித்த வீரர், வீராங்கனைகள் 04/29 அன்று இரவு 7.00 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’  விமான சேவைக்கு சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெற்றி வீரர்களை வரவேற்பதற்காக விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை விளையாட்டுப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் என பலரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Previous Post

மட்டு.பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures