சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் ராணவ் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தோன்றும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஏ ஆர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட் ‘திரைப்படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி , அர்ச்சனா , கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம் வி பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்.. காதலையும், இளமையையும் கொண்டாடும் வகையிலும்… இன்றைய இளம் தலைமுறையினரின் காதல் பற்றிய பார்வையும்… சுவாரசியமான காட்சிகளால் இடம் பிடித்துள்ளதால் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. படத்தினை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது.
