Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

April 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்  தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, சமூகசெயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை சிவகுரு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Next Post

ரன்பீர் கபூர்- அலியா பட் – விக்கி கௌஷல் கூட்டணியில் உருவாகும் ‘லவ் & வார் ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
ரன்பீர் கபூர்- அலியா பட் – விக்கி கௌஷல் கூட்டணியில் உருவாகும் ‘லவ் & வார் ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ரன்பீர் கபூர்- அலியா பட் - விக்கி கௌஷல் கூட்டணியில் உருவாகும் 'லவ் & வார் 'படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures