Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

April 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

அனைத்து வாசகர்களுக்கும் பிறக்கவிருக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை கற்கத் தொடங்குவார்கள். அந்த வகையில் தற்போது பிறக்கவுள்ள பராபவ தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது? சுப நேரம் என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.

2026 ஏப்ரல் 14ஆம் திகதியன்று சதயம் நட்சத்திரத்தில் பராபவ தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் குரு ஓரையும், அபிஜித் முகூர்த்த நேரமான பகல் 11:45 முதல் 12:30 மணி வரையிலான நேரமே நல்ல நேரம் என்றும், அந்த நேரத்தில் புதிய கணக்குகளை எழுதத் தொடங்கலாம் என்றும் ஆன்மீக முன்னோர்களும்  ஜோதிட நிபுணர்களும் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள். அந்த தருணத்தில்  தமிழ் புத்தாண்டான பராபவ புத்தாண்டை கொண்டாடவேண்டும்.

இந்த நன்னாளில் எம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் மாக்கோலமிட்டு நெய் தீபமேற்றி பஞ்சாங்கத்தை வைத்து தீப தூபம் காட்டி அதில் சில விடயங்களை – சில பக்கங்களை வாசித்திட வேண்டும். 

மேலும் அன்றைய திகதியில் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடுவதும், ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்குவதும் இந்த ஆண்டின் பலன்களை சிறப்பாக பெற இயலும்.

பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் எனும் பஞ்ச அங்கங்களை கொண்டது. 

மேலும் பஞ்சாங்கம் என்பது துல்லியமான வானியல் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது. எம்முடைய முன்னோர்கள் வானில் நிகழும் அற்புதத்தையும் அதிசயத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே துல்லியமாக அவதானித்து அதனை பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி, கிரகணம்,  ஆழிப்பேரலை, தொற்று பாதிப்பு, சர்வதேச அரசியல் மாற்றம், போர் சூழல்… என பல விடயங்களை குறிப்பிடலாம். 

அன்றைய திகதியில் எம்முடைய இல்லத்தரசிகள் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டு சமையலறை பொருட்களை தவிர்த்துவிட்டு, வேப்பம்பூ ரசம் மற்றும் வெந்தயமும், மாங்காயும் கலந்த மாங்காய் பச்சடியை பிரத்யேகமாக தயாரித்து, அதனை இறைவனுக்கு படைத்து அனைவரும் பசியாறுவர்.

பராபவ தமிழ் புத்தாண்டில் அனைத்து வாசகர்களுக்கும் நல்ல நிகழ்வுகளும், சுப அனுபவங்களும் கிடைத்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

புத்தாண்டை கொண்டாடுவோம்! 

புத்தெழுச்சி பெறுவோம்! 

Previous Post

பழம்பெரும் இந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!

Next Post

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

Next Post
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures