நடிகர்கள் பரத் -ராஜ் தருண்- ஆரி அர்ஜுனன் ஆகியோர் இணைந்து அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ திரைப்படத்தின் பரத் , ராஜ் தருண், ஆரி அர்ஜுனன், சுனில் ,ராதா ரவி, கிஷோர் , பால் டப்பா ,அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜிதா வசிஷ்ட் , இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் மில்டன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதல்- நகைச்சுவை- எக்சன் – எமோஷன் என அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
