Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தடுப்பூசிக்காக நிதியை செலவிட்டமையாலேயே அன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது – சரத் வீரசேகர

March 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கையிருப்பில் இருந்த அனைத்து நிதியும் நாட்டு மக்களின் உயிரைக் காக்க கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே செலவிடப்பட்டது. இதன் காரணமாகவே அந்தச் சந்தர்ப்பத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி இல்லாமல் போனது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்றைய தினம் (19) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அன்று நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே ஒன்றிணைந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலங்கைக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் எனத் தூண்டிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளியதாகக் குற்றம் சாட்டினார்.

அன்று எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டபோது ராஜபக்ஷக்களைத் திருடர்கள் என விமர்சித்தவர்கள், இன்று உலக யுத்தத்தைக் காட்டித் தப்பித்துக்கொள்ள முயல்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், முறையான வெளிநாட்டுக் கொள்கை இருந்திருந்தால் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் உதவியுடன் இந்த எரிபொருள் நெருக்கடியைத் தீர்த்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் மின்சார உற்பத்திக்காக பாரியளவில் டீசல் வீணடிக்கப்படுவதாகவும், இது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியே தவிர யுத்தத்தின் விளைவல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது அமெரிக்காவின் குடீஐ அமைப்போ சுரேஷ் சலேவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் தங்கியிருந்த நிலையில், அரசியல் தஞ்சக்கோரிக்கை பெறுவதற்காகச் சிலரால் கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தோற்கடிக்கப் பெரும் பங்காற்றிய ஒரு அதிகாரியை, தமிழ் புலம்பெயர் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காக இன்று எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த ஒரு சிறையில் அடைத்து அரசாங்கம் பழிவாங்குவதாக அவர் கடுமையாகச் சாடினார். 

அத்துடன், உண்மைத் திருடர்களைப் பிடிக்க முடியாத அரசாங்கம், சிறு காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர்களைச் சிறையிலடைத்து மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.    

Previous Post

மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்

Next Post

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026
இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures