Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து தொடர்கள் பிற்போடப்பட்டது

March 11, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து தொடர்கள் பிற்போடப்பட்டது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம் மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று (11) அறிவித்தது.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையில் உருவெடுத்த இன்னோரென்ன சவால்கள், விமான சேவை கட்டுப்பாடுகள் ஆகியன காரணமாக இந்தத் தொடர்கள் வருடத்தின் கடைசி காலாண்டு பகுதிக்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சபை தெரிவித்தது.

வரவேற்பு நாடாக ஆப்கானிஸ்தானினால் முதல் தடடைவையாக இலங்கை அழைக்கப்படவிருந்த இந்தத் தொடரில் 6 போட்டிகள் நடைபெறவிருந்தது.

இலங்கை செய்திகள்

மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை ஷார்ஜாவில் மார்ச் 13, 15, 17ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் மார்ச் 20, 22, 25ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஒப்புதல் கிடைத்ததும் இரண்டு இடங்களில் இத் தொடர்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.

எனினும் மார்ச் மாத ஆரம்பத்தில் எதிர்பாராமால் இடம்பெற்ற சம்பவத்தால் தொடருக்கான பயண ஏற்பாடுகள், செயற்பாட்டு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலைமையை அடுத்து முக்கிய பங்குதாரர்களான எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை, ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கம், துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை பிரிதிநிதிகள் கடந்த 4ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தியதுடன் நிலைவரத்தையும் உன்னிப்பாக அவதானித்து வந்தனர்.

இதனை அடுத்து மார்ச் 9ஆம் திகதிவரை பொறுத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

திட்டமிட்டவாறு தொடர்களை நடத்துவதற்கு சகல தரப்பினரும் கூட்டாக முயற்சித்தபோதிலும் விநியோகம் மற்றும் போக்குவரத்து சவால்கள் கட்டுப்பாட்டை மீறியதால் தொடரை பிற்போட்டு போட்டிகளை மீள அட்டவணைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த செயல்முறை முழுவதும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு அதன் ஒப்புதலுடன் தொடர்களை பிற்போடத் தீர்மானிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தது.

Previous Post

கைக்குண்டு, தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Next Post

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் :ஹேப்பி ராஜ் ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி ராஜ் 'படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures