Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இலங்கை; சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வி

February 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இலங்கை; சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண  சுப்பர்  8 குழு 2 போட்டியில் மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை 51 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 12ஆவது நேரடி தோல்வியை இலங்கை தழுவியது. அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்திடம் இதே மைதானத்தில் இலங்கை அடைந்த 4ஆவது நேரடி தோல்வி இதுவாகும்.

இந்தத் தோல்வியை அடுத்து ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குச் செல்லும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது.

அதேவேளை இங்கிலாந்து 2 வெற்றி புள்ளிகளைப் பெற்று குழு 2 இல் முதலாம் இடத்தை  அடைந்து தனது அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் இலங்கை பெற்ற 95 ஓட்டங்களே மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

பவர்ப்ளே ஓவர்களுக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அதன் பின்னர் மீளவே இல்லை.

மத்திய வரிசையில் அணித் தலைவர் தசுன் ஷானக்க மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட துனில் வெல்லாககே (10), கமிந்து மெண்டிஸ் (13) மஹீஷ் தீக்ஷன (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் பில் சோல்ட் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட வில் ஜெக்ஸ் (21), ஹெரி ப்றூக் (14), சாம் கரன் (11), ஜெமி ஓவர்ட்டன் (11 ஆ.இ) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ்

Previous Post

மழையுடனான வானிலை குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post

இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 2024 இறுதிப் போட்டி தோல்விக்கு உரிய பதிலடி கொடுத்தது

Next Post
இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 2024 இறுதிப் போட்டி தோல்விக்கு உரிய பதிலடி கொடுத்தது

இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 2024 இறுதிப் போட்டி தோல்விக்கு உரிய பதிலடி கொடுத்தது

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures