Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சங்க மாநாடுகள் மூலம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது – புபுது ஜயகொட வலியுறுத்து

February 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சங்க மாநாடுகள் மூலம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது – புபுது ஜயகொட வலியுறுத்து

இலங்கையில் வாக்குரிமை கொண்ட ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த பிரஜைக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு. ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் சங்க மாநாடுகள் மூலம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்

அது ஒரு சங்க மாநாடு என்று அழைக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளின் பிரதிநிதித்துவமும் அங்கு காணப்படவில்லை என்பது எனது கருத்து. அங்கு மிகக் குறைந்த அளவிலான பிக்குகளே கலந்துகொண்டனர். குறிப்பாக, குறிப்பிட்ட சில அரசியல் இலக்குகளைக் கொண்ட, இனவாதப் போக்குகளை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடனேயே அந்த மாநாடு அமைந்திருந்தது.

அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கேட்கும் போது, இது ஒரு மாறுபட்ட அரசியல் நகர்வு என்பது தெளிவாகப் புரிகிறது. எனவே, இவ்வாறான சங்க மாநாடுகள் மூலம் இலங்கையின் விசேட ஆட்சியை அல்லது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் சமமானது என்ற போதிலும், மத அடையாளங்களைப் பயன்படுத்தி இனவாதத்தைத் தூண்டுவதையும், அதன் ஊடாக ஆட்சியைத் தீர்மானிக்க முயல்வதையும் மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

Previous Post

தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது – எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம்

Next Post

மழையுடனான வானிலை குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post
வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா

மழையுடனான வானிலை குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

June 13, 2026
விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 13, 2026
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures