14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய மட்ட காற்பந்தாட்ட சமேபோஷா கிண்ண இறுதிப் போட்டிக்கு யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி தகுதிபெற்றுள்ளது.
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளம் அகில இலங்கை ரீதியில் நடத்திய (U-14) வயதிற்குட்பட்டவர்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சமபோஷா கிண்ணத்துக்கான போட்டிகள் காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மைதானங்களில் இம் மாதம் 6 ,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற குழுப் குழுப் போட்டிகளில் ( Leaque) சம்பியனான யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் பதுளை அல் அதான் கல்லூரியை 03:02 என்ற கோல் கணக்கிலும் காலிறுதியாட்டத்தில் நீர்கொழும்பு அல்ஹிலால் சர்வதேச பாடசாலையை 4:02 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதியாட்டத்தில் கொழும்பு Gateway சர்வதேச பாடசாலையை 02:01 என்ற கோல்கணக்கிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், எதிர்வரும் (11/02/2026) புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கொழும்பு ஷாகிராக் கல்லூரியை யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.