Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை…! கல்வி அமைச்சரின் அறிவிப்பு

February 4, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (03) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது தொடர்பாகத் தெரிவித்தார்.

இந்தச் சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ இல்லை

“6 ஆம் தரத்தின் முதலாம் தவணைக்கான பாடத்தொகுதிகளே அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுள் எதனையும் நாம் நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ இல்லை.

Advertisement

எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை...! கல்வி அமைச்சரின் அறிவிப்பு | Education Ministry Re Examines Grade 6 Modules

6 ஆம் தரத்திற்கான திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முன்மொழிந்துள்ளோம்.

2027 இல் அதனை நடைமுறைப்படுத்தும்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கே நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதனை தற்போது நீக்கவோ அல்லது நஷ்டம் ஏற்படும் வகையிலான எந்தவொரு தீர்மானத்தையோ நாம் எடுக்கவில்லை.

கற்பித்தல் பணி

6 ஆம் தரத்திற்கான பாடப்புத்தகங்களை நாம் ஏற்கனவே அச்சிட்டுள்ளோம், தற்போது களஞ்சியசாலைகளில் உள்ளவற்றை விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம்.

எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை...! கல்வி அமைச்சரின் அறிவிப்பு | Education Ministry Re Examines Grade 6 Modules

பெப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் அனைத்துப் பாடப்புத்தகங்களையும் விநியோகிக்கத் தயாராக உள்ளோம்.

ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

பழைய பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளதால் ஆசிரியர்களால் அவற்றைக் கற்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

Previous Post

பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures