Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் மறுத்தால் நாமலுடன் கூட்டணி: ரணில் திட்டவட்டம்!

February 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அதற்கு மாற்றாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே ஒரு விசேடத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான அரசியல் கூட்டணி முறிந்தால், கட்சி அத்தகைய அரசியல் தீர்மானத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு வலுவான போக்கு காணப்படுவதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணம் காரணமாக, இதுபோன்ற ஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவதில் இரு தரப்பிலிருந்தும் எந்த எதிர்ப்பும் இருக்காது என பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சஜித் மறுத்தால் நாமலுடன் கூட்டணி: ரணில் திட்டவட்டம்! | Alliance With Namal If Sajith Refuses Unp

இதற்கு இணையாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் கடந்த சில நாட்களில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் பல சுற்று விசேட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைக்கும் நோக்கில் கலந்துரையாடல்கள் நடந்து வந்தாலும், இரு கட்சிகளின் ஆர்வலர்களும் கலந்துரைாயடல்கள் இன்னும் வெற்றிபெறவில்லை என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிடமிருந்து நேர்மறையான பதில் இல்லாததால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

தற்போதைய அரசியல் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படாவிட்டால், வெற்றி இன்னும் தொலைவில் இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர்கள் குழு ஏற்கனவே கட்சித் தலைமையிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்சிகளின் இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு ஒரு விசேட முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்திக்கு அனுப்பியிருந்தாலும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும் ‘வித் லவ் ‘ பட நாயகன் அபிஷன் ஜீவந்த்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures