Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு

February 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கு தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது லண்டனிலுள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பானதே இந்த சர்ச்சையாகும்.

கைது செய்யப்பட்ட ரணில்

அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கௌரவப் பட்டம் பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இந்தப் பயணம், ஒரு தனியார் பயணமாக இருந்தபோதிலும், சுமார் 16.6 மில்லியன் ரூபாய் முதல் 16.9 மில்லியன் ரூபாய் வரையிலான அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு | Legal Investigation Against Ranil Ananda Wijepala

இது தொடர்பாக 2025 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காகப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சிஐடி சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டது, சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எதிர் தரப்பு சட்டத்தரணிகள் கருதினால், அதனை அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்கும். ஒவ்வொரு சிறிய விசாரணைக்கும் சட்டமா அதிபரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் சிஐடிக்கு இல்லை“ என குறிப்பிட்டார். 

Previous Post

அவசரகால நிலை சட்டம் நீடிப்பு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures