கொழும்பில் அனைத்துலக நாணயநிதிய குழு தங்கியிருந்த வேளை அந்தக்குழுவை எத்தனை தமிழ் அரசியல் முகங்கள் அல்லது தமிழ்குடிசார் அமைப்புகள் சந்தித்தன என்பது அவற்றுக்கே வெளிச்சமாக கடவக்கூடிய விடயம்.
இலங்கைக்கு இனிமேலும் நிதி அபாயம் இல்லை, அந்த அபாயத்தை தவிர்க்க அபயம் அளிக்கப்படும் என்ற நற்செய்தியை நேற்று வழங்கி விட்டு இலங்கைக்காக புதிய களப்பயணத்தை நாணய நிதிய குழாம் முடித்துவிட்டு பறந்துவிட்டது.
உள்ளுரில் கிவுல் ஓயா திட்டத்தில் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடத்தலைப்படும் தமிழ் அரசியல் தலைகள் இலங்கைக்கு நிதியுவிகளை வழங்கும் தரப்புக்களுக்கு கூட இவ்வாறான இனப்பரம்பல் மாற்ற விடயங்களை அழுத்தமாக சொல்ல வேண்டிய கடப்பாடுகள் உள்ளதென்ற யதார்த்த்தின் அடிப்படையில் இலங்கை விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு…

