மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்து அவர்களுக்குஎதிராக நடவடிக்கை எடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

