Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் NPP தலையிட வேண்டாம் : எச்சரிக்கும் சி.வி.கே

January 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்த விவகாரத்தில் அநுர தரப்பு குத்திமுறிய தேவையில்லை எனவும் மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம – கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் யாழ் விஜயம் 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் NPP தலையிட வேண்டாம் : எச்சரிக்கும் சி.வி.கே | Npp Should Not Interfere In Itak Internal Affairs

வெறுமனே அரச நித்யில் என்.பி.பி அல்லது ஜே.வி.பி கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் படம் காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் என்.பி.பியினர் வடக்கிற்கு வந்து படம் காட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்“ என தெரிவித்தார்.

Previous Post

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

Next Post

5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணியில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்

Next Post
இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணியில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures