கொடவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மதியம் பதிவாகியுள்ளது.
கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதி பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ், பொலிஸ் சார்ஜென்ட் அஜந்த, பொலிஸ் கான்ஸ்டபிள திசாநாயக்க மற்றும் கஹவத்த ஆகியோரால் குறித்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
