உலகில் விமர்சனங்கள் இல்லாத தலைவர்கள் இல்லை. அப்படித்தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவர்களும். உலகின் அரசியல் மாற்றங்களையும் தலைவிதிகளையும் தீர்மானிக்கக்கூடியவராகவும் டிரம்ப் உள்ளார் என்பதுதானே உண்மை.
அத்தகைய தலைவர்களை நோக்கித் தமிழ் தலைவர்கள் நகர வேண்டும். அவர்களைச் சந்தித்து எமக்கான அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்த வேண்டும். அதுவே நன்மை தரக்கூடிய அணுகுமுறை.
ஆனால் தமிழ் தலைவர்கள் இலங்கை அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்த முடியாத தலையீடுகளை செலுத்த முடியாத தலைவர்களையும் அமைப்பையும் நம்பியிருப்பதுதான் எமது அவலம் தொடர்வதற்குக் காரணம்.
இன்று அமெரிக்க ஜனாதிபதி நினைத்தால் இலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற வரலாற்று நெருக்கடிகள், துயரங்கள் தீரும். அதை நோக்கி நாங்கள் செல்லவில்லை.
உலகில் எங்கு நினைத்தாலும் எதை நினைத்தாலும் சாதிக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளார். பூகோள அரசியலை நாம் புரிந்து அமெரிக்காவின் தலையீட்டை ஏற்படுத்துவோமாக இருந்தால் எங்கள் நாட்டில் நிம்மதி மலரும்.
தமிழ் தலைவர்கள் அதை நோக்கி ஏன் நகர்கிறார்கள் இல்லை. இன்று ஈழத் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிப் பலம் பெற்றிருக்கும் நிலையில் இந்த அணுகுமுறையில் செல்வதுதான் காலத்திற்கு ஏற்ப வழியும் தீர்வுமாகும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை

