Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்

January 4, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை கன்னியாவுக்கு  ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் செய்து அங்கு இடம் பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் சில வருடங்களுக்கு முன்னதாக பிரச்சினைகள் இருந்தது அனைவருக்கும் தெரியும் அங்கிருந்த பிள்ளையார் கோயிலை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தபோது அது தடுக்கப்பட்டதும் கோயில் இருந்த மேடையில் பௌத்த கொடி நாட்டப்பட்டு தொல்லியல் திணைக்களத்தினால் எவ்வித கட்டுமாணமும் செய்ய முடியாது என்று சொல்லியும் விகாரை ஒன்றை கட்டுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டதும் ஒரு விடயம் 2019ல் இடம் பெற்றது.

அந்த வேலையில் நாங்கள் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து அந்த நிலத்துக்கு சொந்தமான திருகோணமலையில் உள்ள  இன்னொரு கோயில் உரிமையாளரான கோகிலாரமணி என்கின்ற அம்மையார்.

அவருக்கு நீதிமன்றில் நான் ஆஜராகி இடைக்கால தடை ஒன்றும் பெறப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதற்காக இறுதியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பான சில நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்திய போது அதில் பண்டைய விகாரை இருந்ததாக அடையாளங்கண்டிருந்தார்கள்.

பிள்ளையார் கோயில் 150 வருடங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இருந்தது. ஆனால் 2000ம் ஆண்டுக்கு முன்னதாக விகாரை இருந்ததாகவும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. பண்டைய விகாரை அங்கு இருந்திருந்தால் அதனை பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு தொல்லியல் திணைக்களத்துக்கு இருக்கிறது.

ஆனால் மீள கட்டுமாணம் எதுவும் செய்ய முடியாது. ஆகவே பேணிப்பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் செய்யலாம் அதேவேலையில் 150வருடங்களாக பிள்ளையார் கோயில் அங்கு இருந்ததன் காரணமாக அந்த இடத்தில் இனொரு அளவீடு செய்யப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதில் பிள்ளையார் கோயில் மீளவும் கட்டலாம் என நீதிமன்றத்தில் இணக்கப்பாட்டோடு குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது. அந்த இணக்கப்பாட்டுக்கு மாறாக அந்த நடவடிக்கைக்கு முரணாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

Previous Post

வெனிசுவெலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

Next Post

வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் | பிரதி அமைச்சர்

Next Post
வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் | பிரதி அமைச்சர்

வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் | பிரதி அமைச்சர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures