2000இல் யாழ்ப்பாணத்தை மாத்திரமின்றி இலங்கையை உலுக்கிய மிருசுவில் படுகொலையில் உயிர் தப்பிய ஒருவர் அப்போதைய யுத்த கால நெருக்கடியால் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைந்தார். அப்படி சரணடைந்தவரை டக்ளஸ் தேவானந்தா மீள அதே இராணுவத்திடம் கையளித்தார்.
டக்ளசின் ஈழ மக்கள் விரோதச் செயலுக்கு இது தக்க உதாரணம்.
இப்படி, போராளிகளை பொதுமக்களை ஸ்ரீலங்கா அரசுக்கு காலம் காலமாக காட்டிக் கொடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பல பிரச்சாரங்களை செய்து வரலாற்று துரோகம் இழைத்த டக்ளஸ் தேவானந்தா கர்ம வினையை இப்போது அறுவடை செய்கின்றார்.
1994 யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் டக்ளஸ் தேவானந்தாவின் காட்டிக் கொடுப்பினாலும் அசுர ஏற்பாடுகளினால் யாழ்ப்பாண மக்கள் பெருந்துன்பங்களை அனுபவித்து வந்தார்கள். ஊடகவியலாளர்கள்,
கலைஞர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், கொச்சைப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசுக்கு ஒரு துணை ஆயுதக் குழுவாக வன்முறைகளில் ஈடுபட்ட அதே வேளை கருத்தியல் ரீதியாகவும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை டக்ளஸ் முன்னெடுத்தார்.
உப்புத் தின்றவன் தண்ணி குடித்தே தீர வேண்டும் என்பதைப் போல அரசியல் பிழைப்போருக்கு அறம் கூற்றாகும் என்பதைப் போல தான் செய்த கருமவினைகளின் பலனை டக்ளஸ் தேவானந்தா அனுபவிக்கின்ற ஆரம்பமே இந்த கைது.
இது இன்னமும் மக்களுக்கு துரொகம் இழைத்து தமது சுயநல அரசியலைச் செய்கின்றவர்களுக்கும் ஒரு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
