குருணாகல் – லுணுவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 18 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

