னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன, மண்சரிவு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதன்படி, அண்மைய காலங்களில் நாட்டில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிகுறிகள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கீறல்கள், ஆழமான விரிசல்கள் மற்றும் தரையில் பள்ளங்கள்.
படிப்படியாக சாய்ந்த மரங்கள், மின் கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசி கோபுரங்கள் போன்றவை.
கட்டிடங்களின் தரைகள் மற்றும் சுவர்களில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் அவற்றின் படிப்படியான வளர்ச்சி குறித்து.
நீர் ஆதாரங்களில் திடீரென தோற்றம் அல்லது வண்டல் படிதல், ஏற்கனவே உள்ள நீர் ஆதாரங்களில் அடைப்பு அல்லது இழப்பு.
இவ்வாறான, அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறவும், அதிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில், இவ்வாறான பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்தால், மண்சரிவு, பாறை சரிவு, என்பவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கண்டி – கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தோலுவ, தும்பனே, மெடதும்பர, மினிப்பே, பாதஹேவஹெட்ட, யட நுவர, கங்கா இஹல கோரல, அக்குரண, உடுநுவர, பன்வில, பாததும்பர, குண்டசாலை, பபாகே கோரளை, ஹதரலியம்பத்த, பூஜைத்துலியம்பத்த, உடுதுலயம்பத்த
கேகாலை – கலிகமுவ, கேகாலை, மாவனெல்ல, ரம்புக்கன, தெஹியோவிட்ட, வரகாபொல, தெரணியகல, புலத்கொஹபிட்டிய, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, அரநாயக்க
குருநாகல் – நாரம்மல, மாவத்தகம, மல்லவப்பிட்டிய, அலவ்வ, ரிதிகம, பொல்கஹவெல
மாத்தளை – ரத்தோட்டை, வில்கமுவ, உக்குவெல, பல்லேபொல, மாத்தளை, லக்கல பல்லேகம, யதவத்த, நாவுல, அம்பன் கங்கா கோரளை
நுவரெலியா – நில்தண்டஹின்ன, வலப்பனை, ஹங்குரன்கெத, மதுரட்டை
கடந்த 24 மணி நேரத்தில் பின்வரும் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்தால், மண்;சரிவுகள், பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
விழிப்புடன் இருக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை – உவாபரணகம, கந்தகெட்டிய, பண்டாரவளை, சொரண தோட்ட, ஹாலி எல, மீகஹகிவுல, பதுளை, எல்ல, ஹப்புத்தளை, லுனுகல, வெலிமட, பசறை, ஹல்துமுல்ல
நுவரெலியா – அம்பகமுவ கோராளை, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு
இரத்தினபுரி – கஹவத்தை, கொடகவெல, கொலன்னா
கடந்த 24 மணி நேரத்தில் பின்வரும் பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்தால், மண்சரிவுகள், ஏற்பட வாய்ப்புண்டு.
கொழும்பு – பாதுக்கை, சீதாவாக்கை
காலி – அல்பிட்டிய, யக்கலமுல்ல
கம்பஹா – மீரிகம, அத்தனகல்ல, திவுலபிட்டிய
களுத்துறை – புலத்சிங்கள, இங்கிரிய, ஹொரண
மாத்தறை – அதுரலிய, பஸ்கொட
மொனராகலை – பிபில, மெதகம
இரத்தினபுரி – கிரி எல்ல, நிவித்திகல, எஹலியகொட, குருவிட்ட, கலவான, பெல்மதுல்ல, எலபாத, பலாங்கொட, ஓபநாயக்க, இம்புல்பே, அயகம, இரத்தினபுரி, கல்தொட்ட
மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆபத்து உள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அதிகரித்த விழிப்புணர்வைப் பயன்படுத்துவதன் மூலம் பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

