Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமாகாணத்தில் 7 பிரதான வீதிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுப் பாவனைக்குத் திறப்பு!

December 4, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடமாகாணத்தில் 7 பிரதான வீதிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுப் பாவனைக்குத் திறப்பு!

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட வட மாகாண  ஆளுநர்  மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமைக்குமாறு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்தத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் குறித்த வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்படுகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் – செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. 

மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

கட்டாடுவயல் – இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மகிழங்குளம் – பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது. 

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் நேற்று திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான ஏனைய வீதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யத் திணைக்களம்  செயற்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக தடம் பதிக்கும் நடிகர் ஷாம்

Next Post

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ.. சுகுமாரி’

Next Post
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ.. சுகுமாரி’

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஓ.. சுகுமாரி'

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures