முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சி.பி. ரத்நாயக்க, அவ்ஆணைக்குழுவுன்னு இன்றைய தினம் காலை சென்றிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

