Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள்

November 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர்.

நாட்டை சீரழித்த வரலாற்றை மாற்றியவர்கள்

நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம்.

வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள் | Thuylumillan Liberated From Military In North

கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஒரு அரசியல் கலாசாரத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தை தூண்ட முனைகிறது.

எமது அரசாங்கம் தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை .

துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்

கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவு கூரும் உரிமையை வழங்கியது எமது அரசாங்கமே.

வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள் | Thuylumillan Liberated From Military In North

 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பிடம் இருக்கின்ற துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வடக்கில் காணி விடுவிப்புகள்

அதேபோல வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும். அதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.

வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள் | Thuylumillan Liberated From Military In North

அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

எமது அரசாங்கம் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்காக புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

 அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் 

அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள் | Thuylumillan Liberated From Military In North

இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டை சூறையாடுவதே நோக்கம்.

இதை நான் விலாவாரியாக கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்சர்கள் சூறையாடினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

ஆகவே எமது அரசாங்கத்தை வீழ்த்துவதாக கூறிக்கொண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளை செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

Previous Post

டிசம்பரில் வெளியாகும் விமலின் ‘மகா சேனா’

Next Post

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

Next Post
லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures