சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் லாபத்திற்குரிய நட்சத்திர நடிகராக திகழும் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மகா சேனா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மகா சேனா ‘ எனும் திரைப்படத்தில் விமல், சிருஷ்டிடாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மானஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. பிரவீண் குமார் & உதய் பிரகாஷ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். யானை மற்றும் யானை பாகனின் வாழ்வியலையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விவரிக்கும் இந்த திரைப்படத்தை மருதம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ்- தெலுங்கு- மலையாளம் -கன்னடம் -இந்தி -ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

