முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஜே கே சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜோன் விஜய், காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். அவல நகைச்சுவையை மையப்படுத்தி கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேசன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் ..நிழல் உலக தாதா ஒருவரின் அசாதாரணமான மரணம் தொடர்பான காட்சிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.
