‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் பவிஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘லவ் ஓ லவ்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் உருவாகி வரும் ‘லவ் ஓ லவ்’ எனும் திரைப்படத்தில் பவிஷ் அறிமுக நடிகை நாக துர்கா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை என். பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். காதல் கதையாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஷினிமா மீடியா & என்டர்டெய்ன்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு ‘லவ் ஓ லவ்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பெயரில் காதல் இருப்பதால் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற காதல் படைப்பாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் டிசைனை நினைவுபடுத்துவதாக இணையவாசிகள் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

