சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கிண்டலடித்துள்ளார்.
நாடாளுமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இளங்குமரன் எம்.பி, இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நிலம் தொடர்பாக தனது பெயரை இழுத்து கதைத்ததாக அரைகுறை சிங்களத்தில் தெரிவித்த நிலையிலேயே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை
அத்துடன் சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை .நீ தமிழில் தானே பிறந்தனி எனவும் சிறீதரனும் கள்ளன்.இளங்குமரனும் கள்ளன். இந்தக் கள்ளர்களால் வடக்கு மாகாணத்தை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.
