Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலுக்கு தலைமை ஆசனம்! தயாராகும் கட்டமைப்பு அறிக்கை

October 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவையும் மீண்டும் இணைப்பதற்கான கட்டமைப்பு குறித்த அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவாதாக குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கூட்டணி

இந்நிலையில்  புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிப்பதாக கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுக்கு தலைமை ஆசனம்! தயாராகும் கட்டமைப்பு அறிக்கை | Ranil To Be Opposition Leader

இரண்டு அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படுவது, ஒன்றாக அரசியல் செய்வது, தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது, ஒரே கொள்கை, ஒரே சித்தாந்தம் மற்றும் ஒரே திட்டத்தின்படி செயல்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கபீர் ஹாஷிம் சுட்டிக்காட்டுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் சமகி ஜன பலவேகயவும் இணைந்து முன்னேறுவதற்கு பெரும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், பல அடிமட்ட உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இதைக் கவனத்தில் கொண்டு, சமகி ஜன பலவேகய செயற்குழு மற்றும் அரசியல் குழுவின் வேண்டுகோளின் பேரில் இந்த அறிக்கையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Previous Post

‘நீறு பூத்த நெருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று

Next Post

எக்னலிகொட கடத்தலுடன் கோட்டாபயவுக்கு தொடர்பு: சரத் பொன்சேகா பகிரங்கம்!

Next Post
மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

எக்னலிகொட கடத்தலுடன் கோட்டாபயவுக்கு தொடர்பு: சரத் பொன்சேகா பகிரங்கம்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures