அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை செவ்வாய்க்கிழமை (14) சந்தித்து கலந்துரையாடினார்.
நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேரில் சந்தித்து, சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
