கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 ஆம் ஆண்டு மாணவன் ஒருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் முதலாம் ஆண்டு மாணவி மீது கடந்த 09 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் 3 ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவன் விடுதி பகுதியில் வைத்து கன்னத்தில் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து மாணவி மீது தாக்குதல் நடத்திய பொலன்னறுவையைச் சேர்ந்த மாணவனை திங்கட்கிழமை (14) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மாணவனை திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து நீதவான் அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டார்.