Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

October 3, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரூ. 28 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்படாத சொத்துக்களை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தாாக கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மேஜர் நெவில் வன்னியாராச்சி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Mahinda S Chief Security Officer Investigation
Previous Post

தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மே’ எனும் படத்தின் டீஸர் வெளியீடு

Next Post

விஜய் கைது செய்யப்படுவார் : தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு

Next Post
விஜயின் தேர்தல் பிரசார மேடையில் ஈழத்தமிழர் விவகாரம்! மோடி தரப்புக்கு கடும் விமர்சனம்

விஜய் கைது செய்யப்படுவார் : தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures