எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் அசல் இணைய தொடர் வரிசையில் ஒளிபரப்பாகவுள்ள ‘வேடுவன்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பவன் இயக்கத்தில் உருவான ‘வேடுவன்’ எனும் இணையத் தொடரில் நடிகர் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், சிரவ்நிதா ஸ்ரீகாந்த் , ரம்யா ராமகிருஷ்ணன், ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விபின் பாஸ்கர் இசையமைத்திருக்கும் இந்த இணையத் தொடரை ஜீ தமிழ் டிஜிட்டல் தளத்திற்காக ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கிறார்.
இணையத் தொடரைப் பற்றி இயக்குநர் பேசுகையில் , ”திரைப்பட நடிகராக இருக்கும் சூரஜ் எனும் நடிகருக்கு காவல்துறை அதிகாரி ஒருவரின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் படைப்பில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது அவருக்கு ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை ” என்றார்.
இந்த முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் இணையத் தொடரை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.