முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து விசாரித்தார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.