2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த விண்ணப்பங்கள் 2025 செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk practical இணைப்பினூடாகப் பிரவேசித்து நிகழ்நிலையில் விண்ணப்பத்தை சமர்பிக்க முடியும்.

இது தொடர்பாக ஏதேனும் மேலதிக தகவல்கள் வேண்டுமாயின் பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளலாம்.
- தொலைப்பேசி இலக்கங்கள்: 0112784208/0112784537/0112785922
- மின்னஞ்சல்: [email protected]