‘பிக் பொஸ்’ மூலம் ரசிகர்களிடம் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘டாஸ்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் சி. ராஜு சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினரை வாழ்த்தினார்.
இயக்குநர் சகு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் ‘டாஸ்’ திரைப்படத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் ரிவி யோகி, ஷன்னா, தேஜாஸ்ரீ, சஞ்சய் சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தர்மதுரை ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாந்தன் அனிபஜகனே இசையமைக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை பிளாக் டயமண்ட் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சையத் ஜாஃபர் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” மர்மமான முறையில் மூன்று கொலை குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இதன் அசலான பின்னணி என்ன? இந்த கொலைக்கும் யாஷிகா ஆனந்திற்கும் என்ன தொடர்பு? என்பதனை புலனாய்வு செய்யும் வகையில்… விறுவிறுப்பான க்ரைம் திரில்லராக இப்படம் தயாராகிறது ” என்றார்.