வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை செப்டெம்பர் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்த செப்டெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.