ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை நேரப்படி இன்று (24.09) நள்ளிரவு 12 மணிக்கு ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
அமெரிக்காவில் வரவேற்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று அமெரிக்காவை சென்றடைந்தார்.

அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.