Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது – மீண்டும் நாடு சீரழிந்து விடும்.. நாடாளுமன்றில் ஆவேசம்!

December 9, 2016
in News
0
முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது – மீண்டும் நாடு சீரழிந்து விடும்.. நாடாளுமன்றில் ஆவேசம்!

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது – மீண்டும் நாடு சீரழிந்து விடும்.. நாடாளுமன்றில் ஆவேசம்!

இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான

இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் இஸ்லாம், அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ் தொடர்பாக மிகவும் கீழ்த்தரமான, கேவலமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனவாதம் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தோம்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற போது முஸ்லிம்கள் அரேபிய கலாச்சாரத்னை பின்பற்றக் கூடாது எனத்தெரிவித்திருந்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே கலாச்சாரம் தான் என்பதை நான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். முஸ்லிம்கள் அரபு நாட்டில் இருந்தாலும் சரி வேறு எங்கு இருந்தாலும் சரி அனைவருக்கும் இஸ்லாம் ஒரே கலாச்சாரத்தை வழிகாட்டியுள்ளது.

“முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ முடியும். ஆனால் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றக் கூடாது, குர்ஆனை பின்பற்றக்கூடாது” போன்ற கருத்துக்களை கூறி பொதுபல சேன ஞானசார தேரர் மீண்டும் இஸ்லாம் தொடர்பில் கேவலமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் மூச்சே இஸ்லாம் தான் – வாழ்க்கையே குர்ஆன் தான் – உலகத்தில் நாங்கள் வாழ்வதே இந்த மார்க்கத்துக்காகத்தான். இந்த மார்க்கத்தை பின்பற்றக் கூடாது என யாராவது தடைவிதிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்தாகவேண்டும் என இஸ்லம் கூறுகின்றது.

இன்று இஸ்லாத்துக்கும் – முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் மனவேதனையுடனும் – கவலையுடனும் இருக்கின்றார்கள். இஸ்லாமும், குர்ஆனும், அல்லாஹ் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சிக்கப்படும் போது முஸ்லிம் இளைஞர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முஸ்லிம் எம்.பிக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் எங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்நிலை தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும்.

அவர்களது முதல் இலக்கு நாங்கள் தான். எங்களை படுகொலை செய்து விட்டே அவர்களுடைய போராட்டங்களை ஆரம்பிப்பார்கள். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய பின்னர் முதலில் படுகொலை செய்தது தமிழ் அரசியல் தலைவர்களையே.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எமக்கு 30 ஆண்டுகள் போய் நாடு குட்டிச்சுவரனாது. இது போன்று, முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நாங்கள் இடமளிப்போமானால் இந்த பிரச்சினையை 50, 60 வருடங்கள் சென்றாலும் தீர்க்க முடியாது போய்விடும் என்பதுடன் நாடு சீரழிந்துவிடும்.

இந்த நாடு பௌத்த நாடு. இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளது. முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு வந்தான் வரத்தான்கள் அல்ல மாறாக இந்நாட்டின் சொந்தக்காரர்கள்.

நாட்டின் அனைத்து தேசிய பிரச்சினைகளிலும் நாங்களும் பங்கு கொண்டுள்ளோம். நாட்டின் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும் போராடியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக இரவு – பகலாக உழைக்கின்றோம். நாட்டை காட்டிக்கொடுத்தவர்கள் அல்ல முஸ்லிம்கள். நாங்கள் இராணுவத்துக்கு எதிராகவோ – பொலிஸாருக்கு எதிராகவோ என்றுமே செயற்பட்டது கிடையாது.

இந்த நாட்டை எமது உயிருக்கும் மேலாக நாங்கள் நேசிக்கின்றோம். எனவே, சகல இன மக்களும் தங்களது அரசியல் உரிமைகளோடு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஆவேசமான கருத்துக்களை பாராளுமன்றில் முன்வைத்தார்.

Tags: Featured
Previous Post

யுத்தகாலத்தில் வீசப்பட்ட 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு

Next Post

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

Next Post
ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures